Last Updated : 23 Aug, 2016 11:02 AM

 

Published : 23 Aug 2016 11:02 AM
Last Updated : 23 Aug 2016 11:02 AM

ட்ரெய்லர் வியூ: சுரீர் கேள்வியுடன் கவனம் ஈர்க்கும் மாநகரம்

'மாயா' படத்தைத் தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸின் புதிய படம் 'மாநகரம்'. காட்சியமைப்புகளும் வசனங்களும் வெகுவாக கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது, இந்தப் படத்தின் ட்ரெய்லர். | இணைப்பு கீழே |

வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் நான்கு பேர் சென்னைப் பெருநகரத்தின் மறுபக்கத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கதையும் திரைக்கதையும் விவரிப்பதாக படக்குழு சொல்கிறது.

நிழல் உலகமும் நிஜ உலகமும் சந்திக்கும் புள்ளியை நால்வர் கதைகளுடன் ஹைபர் லிங்க் திரைக்கதையாக வடிவமைத்திருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது.

ஆள்கடத்தல் முதல் ரவுடியிஸம் வரை மாநகரின் மறுப்பக்கத்தை இருள் சூழ்ந்த ஒளியமைப்பில் காட்டியிருப்பது த்ரில்லர் அனுபவம் தரும் என எதிர்பார்ப்பை கூட்டுகிறது. இந்த ட்ரெய்லரில் வசனங்களும் அதிகம் ஈர்க்கின்றன. பின்னணி இசையும் ஒலி அமைப்பும் அழுத்தம் கூட்டுகின்றன.

குறிப்பாக, ட்ரெய்லர் முடியும்போது சார்லி கதாபாத்திரம் கேட்கும் பதில் கேள்வி 'சுரீர்.

ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, முனிஸ்காந்த் ராமதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'மாநகரம்' படத்தின் ட்ரெய்லர் இதோ..