Last Updated : 12 Jul, 2016 01:09 PM

 

Published : 12 Jul 2016 01:09 PM
Last Updated : 12 Jul 2016 01:09 PM

சீனு ராமசாமி இயக்கத்தில் மம்மூட்டி: புதிய கூட்டணி பேச்சு



சீனு ராமசாமி இயக்கவிருக்கும் புதிய படத்தில் மம்மூட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

'இடம் பொருள் ஏவல்' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'தர்மதுரை' படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. யுவன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தில் தமன்னா, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் விஜய் சேதிபதி உடன் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருக்கிறார்.

'தர்மதுரை' படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது.

தனது அடுத்த படத்தின் முதற்கட்ட பணியில் தீவிரமாகி இருக்கிறார் சீனு ராமசாமி. இப்படத்தின் கதைக்கு மம்மூட்டி பொருத்தமாக இருப்பார் என தீர்மானித்து, அவரிடம் கதையை கூறியிருக்கிறார் சீனு ராமசாமி. இன்னும் அதிகாரப்பூர்வமாக மம்மூட்டி கையெழுத்திடவில்லை. தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தேதிகள் பேச்சுவார்த்தை முடித்தவுடன் மம்மூட்டி கையெழுத்திடுவார் என்கிறது படக்குழு.

மேலும், ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வரும் 'பேரன்பு' படமும் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x