Published : 16 Aug 2016 02:06 PM
Last Updated : 16 Aug 2016 02:06 PM
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் ஒவ்வொரு சிம்பு கெட்டப் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒரு டீஸரை வெளியிட படக்குழு திட்டம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அன்பாவனவன் அசராதவன் அடங்காதவன்'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் 3கெட்டப்களில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. இதில் மதுரை மைக்கேல் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு மட்டும் நிறைவு பெறும் தருவாயில் இருக்கிறது. அடுத்த வாரம் சென்னையில் டி.ராஜேந்தரின் ஹிட் பாடல்களுக்கான அரங்கை அப்படியே மாற்றியமைத்து அதில் சிம்பு - ஸ்ரேயா பாடும் பாடலை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதுவரை சுமார் 20% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது.
மேலும், விரைவில் மதுரை மைக்கேல் கதாபாத்திரத்தின் டீஸர் வெளியாக இருக்கிறது. இதைப் போன்றே சிம்புவின் அடுத்த கெட்டப் படப்பிடிப்பு முடிந்தவுடன், அதற்கான டீஸரை வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. இறுதி கெட்டப் முடிந்தவுடன் அதற்கான டீஸரை வெளியிடவும் இருக்கிறார்கள்.
அனைத்து படப்பிடிப்பும் முடிந்தவுடன் ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. சிம்புவின் அடுத்த 2 கெட்டப்பிற்கான நாயகிகள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT