Published : 02 Jun 2016 03:24 PM
Last Updated : 02 Jun 2016 03:24 PM

நெட்டிசன் நோட்ஸ்: இளையராஜாவா? இசைக்கு ராஜாவா?

1000 படங்களைத் தாண்டி இசையமைத்து வரும் இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்த நாள். இசையைக் கொண்டாடும் ரசிகர்கள் அனைவரும், இளையராஜாவையும் கொண்டாடுகின்றனர். இன்று >#HBDRajaSir, > #HBDIlayaraja என்ற ஹேஷ்டேக் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து, அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

>அழகிய தமிழ் மகன்:

மற்றவர்களை விட இளையராஜா ஸ்பெஷல். ஏன்னா என் மனநிலைக்கேற்ப இசைக்கும் பாடல் அவருடையதாகத்தான் இருக்கிறது... #HBDRajaSir

>ʝєииι fєя ɮʟɛssʏ:

காலைலயே ரேடியோவ டியூன் பண்ணியாச்சு... இன்னிக்கு ஒரு ஆயிரம் ராஜா பாட்டாவது பாடிடணும்.

#HBDRajasir

>Sri:

எல்லாவற்றுக்கும் முந்தைய நட்பு, உழன்று திரிந்த பொழுதுகளில் சுமைதாங்கி, மிக இருண்ட நாட்களில் கரைசேர்த்த துணை, இளையராஜாவின் இசை. #HBDRajasir

>நிலாத்தோழி®:

பாட்டுக்கு ஒரு தலைவன், #HBDRajaSir

>பட்டினத்தார்:

பல இரவுகளில்.. என் தூக்கத்தை கெடுத்ததும், தூக்கத்தை கொடுத்ததும் உன் இசையே.. #HBDRajaSir

>ℳr.பொன்னியின்செல்வன்:

பசுமையான வயல்வெளியின் பசும்புற்களை, வெற்றுப் பாதத்தில் தொட்ட சிலிர்ப்பை மனதில் ஏற்படுத்திய இசை #HBDRajasir

>Tһєяı ɮaɮʏ ஷ்ஷார்ப்☆:

ராஜா சாங் கேட்கறப்பத்தான் பழைய நினைவுகள்லாம் தூசி தட்டி பறக்குது... #HBDRajaSir

>முகமூடி ௮ணியாதவன்:

"நீங்கள் இளைய ராஜாவா அல்ல இசைக்கு ராஜாவா??? #HBDRajasir

>தாடிக்காரன்:

என்னதான் காதுகிழிய மாடர்ன் இசையைக் கேட்டு ரசித்தாலும் வாய் முணுமுணுப்பதென்னவோ இசைஞானியின் பாடல்களைத்தான். #HBDRAJASIR

>சிங்கார வேலன்:

இளையராஜாவின் இசைக்கு ஒருபோதும் வயதாவதில்லை #HBDRajasir

>மொக்கச்சாமி:

இந்த ராசாவை நம்பி வந்த யாரும், மோசம் போனதில்லை. #HBDRajasir

>ஸ்ரீவி சிவா:

கடைக்கோடி எளிய ரசிகனாக, ராஜாவின் பிறந்த நாளைக் கொண்டாட, காலைல இருந்து குளிரக் குளிர ராஜா பாடல்கள் கேட்டாச்சு.. #BLISS #HBDRajaSir

>Vijayabharathi C:

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளிப் பருக வேண்டிய அமிர்தம். #HBDRajasir

>சூர்யா:

அளவுக்கு மீறினால் எல்லாம் நஞ்சாகும். ராஜா சார் பாட்டை எவ்வளவு முறை கேட்டாலும் அமிர்தம்தான். #HBDRajasir

>!!! ★எமகாதகன்★ !!!:

முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள் போல், எக்காலத்திற்கும் பொருந்தும் முக்கனி சுவை கொண்ட இளையராஜாவின் இசையமுது. #HBDIlayaraja

*****

ரஜினி, மோகன், கார்த்திக் என பல ஹிட்கள் வந்தாலும் அதன் பின்னே இருப்பது ராஜாதான்! கடவுள் ரூபங்கள் பலவாயினும் இறை ஒன்றே என்பது போல #HBDRajasir

>ட்விட்டர்MGR:

எந்தக் கால இளைஞர் செய்யும் காதலுக்கும், இளையராஜா உந்தன் பாட்டிருக்கும்..! #HBDRajasir

>✍தனி பிறவி:

பல படங்கள், பாடல்கள் மூலம் உயிர் வாழ்கின்றது என்றால் அதற்கு காரணம் நீங்கள். #HBDRajasir

>Lakshmanan.P:

இசைக்காக இந்திப் படம் என்ற மன நிலையை மாற்றியவர் இளைய ராஜா! #HBDRajasir

>ℳr.பொன்னியின்செல்வன்:

புது உலகை நான் ரசிக்க இன்னும் அவகாசமிருக்கிறது, கடந்து வந்த பசுமை நினைவுகளில் மூழ்கிட நான் கொண்ட வரம். #HBDRajasir

>தமிழ் தலைமகன்:

ஒரு பெண்ணை ரசித்ததை விட உங்கள் பாட்டை அணு அணுவாய் ரசித்தது அதிகம் ராஜாசார் #HBDIlayaraja

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x