Published : 14 Sep 2018 06:31 PM
Last Updated : 14 Sep 2018 06:31 PM

அதர்வா ஜோடியாக பிரியா பவானிசங்கர்

அதர்வா நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்.

‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீகணேஷ். அவருடைய இரண்டாவது படம் ‘குருதி ஆட்டம்’. அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம், மதுரையில் உள்ள கேங்ஸ்டர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அத்துடன், தன்னுடைய ‘யு 1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம் இசை உரிமையையும் வாங்கியுள்ளார் யுவன்.

இந்நிலையில், படத்தின் ஹீரோயின் யார் என்பது தெரியவந்துள்ளது. சின்னத்திரையில் இருந்து ‘மேயாத மான்’ மூலம் பெரிய திரையில் அறிமுகமான பிரியா பவானிசங்கர், ‘குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்கிறார். வருகிற 20-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. முதலில் சென்னையிலும், அதன்பிறகு மதுரையிலும் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ராக்ஃபோர்ட் என்டெர்டெயின்மென்ட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x