Published : 13 Sep 2018 08:49 AM
Last Updated : 13 Sep 2018 08:49 AM

ஜோதிகாவின் அடுத்த படம்

ராதா மோகன் இயக்கத்தில் வெளிவரும் ‘காற்றின் மொழி’ படத்தை தொடர்ந்து, ஜோதிகா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிவரும் ‘என்ஜிகே’ படத்தில் கவனம் செலுத்திவரும் ட்ரீம் வாரியர் நிறுவனம், ஜோதிகா படத்தை அக்டோபரில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்குகிறார். மற்ற படக்குழு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x