Published : 08 Jun 2019 02:07 PM
Last Updated : 08 Jun 2019 02:07 PM

ரஜினி படத் தலைப்பில் ஜி.வி.பிரகாஷ்

ரஜினி நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத் தலைப்பில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வாட்ச்மேன்’. விஜய் இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக சம்யுக்தா ஹெக்டே நடித்தார். முக்கியக் கதாபாத்திரங்களில் யோகி பாபு, சுமன், ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

தற்போது எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஹாரர் ஃபேன்டஸி படமான இதில், ஹீரோயினாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ‘ஆயிரம் ஜென்மங்கள்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சண்டைப் பயிற்சி இயக்குநர் கனல் கண்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் மற்றும் எழிலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், க்ளைமாக்ஸ் காட்சி படம்பிடிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆயிரம் ஜென்மங்கள்’, ரஜினி நடிப்பில் 1978-ம் ஆண்டு ரிலீஸான படம். துரை இயக்கிய இந்தப் படத்தில், லதா, விஜயகுமார், பத்மபிரியா உள்ளிட்ட பலர் நடித்தனர். ரஜினி நடிப்பில் வெளியான முதல் த்ரில்லர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘100% காதல்’, ‘ஜெயில்’, ‘4ஜி’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘காதலிக்க யாருமில்லை’ ஆகிய படங்கள் ஜி.வி.பிரகாஷ் கைவசம் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x