Published : 12 Jun 2019 08:49 AM
Last Updated : 12 Jun 2019 08:49 AM

ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பான பேச்சு; பாக்யராஜ் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார்: நடிகர் சங்க தேர்தலில் 2 வேட்புமனுக்கள் தள்ளுபடி

நடிகர் சங்கத் தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பாக்யராஜ் கூறிய கருத்துக்கு நாசர் அணியினர் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளனர். இதுதொடர் பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ள னர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்க உள்ளது. இதில் நாசர் தலைமை யிலான ‘பாண்டவர் அணி’யும், இயக்குநர் பாக்யராஜ் தலைமை யிலான ‘சுவாமி சங்கரதாஸ் அணி’யும் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் திரைப்பட, நாடக நடிகர்களிடம் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றன.

பாக்யராஜ் பேட்டி

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பாக்யராஜ் அளித்த பேட்டியின் ஒரு பகுதி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், வாக்கு திரட்ட பணம் கொடுப்பது தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளித்து பேசுகிறார்.

‘‘நாடகக் கலைஞர்கள் எப்போ தும் கஷ்டத்தில் இருப்பவர்கள். அதனால் ஆதரவு திரட்டச் செல்கிற இடத்தில் பணம் கொடுக்கும் சூழல் இருந்தால் கொடுக்கத்தான் வேண்டி இருக்கும். ‘இப்போது இருப்பதை வைத்துக்கொள் ளுங்கள். தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்ததும் மேலும் செய்வாங்க’ என்று கூறித்தான் ஆக வேண்டும்’’ என்பதுபோல அதில் பாக்யராஜ் கூறுகிறார்.

இதை எதிர் தரப்பினர் கடுமை யாக விமர்சனம் செய்து வருகின் றனர். பாண்டவர் அணியின் துணைத் தலைவர் வேட்பாளரான கருணாஸ் இதுதொடர்பாக நடிகர் சங்கத் தேர்தல் அலுவலகம் முன்பு செய்தி யாளர்களை நேற்று சந்தித்தார்.

நாடக கலைஞர்களுக்கு இழிவு

அவர் கூறும்போது, ‘‘காசு வாங் கிக்கொண்டு வாக்களிப்பவர்கள் என்று நாடகக் கலைஞர்களை பாக்யராஜ் அணியினர் இழிவு படுத்தியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம். ஆதாரங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை யும் நாடுவோம்’’என்றார்.

2 மனுக்கள் தள்ளுபடி

இதற்கிடையில், நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் மனுக்கள் பரி சீலனை நேற்று நடந்தது. பாண்ட வர் அணியில் அனைத்து போட்டி யாளர்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

நடிகர் சங்கத்துக்கு சந்தா கட்டுவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, சுவாமி சங்கரதாஸ் அணி வேட்பாளர்கள் ரமேஷ் கண்ணா, விமல் ஆகிய இருவரது மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட் டன.

ஆர்த்தியின் மனுவும் முதலில் நிராகரிக்கப்பட்டு, ஆய்வுக்குப் பிறகு ஏற்கப்பட்டுள்ளது. மொத்தம் 69 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன. இந்த இறுதிப் பட்டியல் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x