Published : 08 Mar 2019 08:36 AM
Last Updated : 08 Mar 2019 08:36 AM

ராசாத்தி எனக்கு பொண்ணு மாதிரி

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ சீரியலில், ‘ராசாத்தியை வீட்டை விட்டு அனுப்பியே தீருவேன்’ என ஒற்றைக்காலில் நிற்கும் மரதகம்தான் தற்போது சீரியல் பார்வையாளர்களால் திட்டித் தீர்க்கப்படும் சேனல் வில்லி. ‘‘சீரியலில்தாங்க நான் அப்படி. நிஜத்தில் குழந்தை மாதிரி. கேமராவுக்கு முன்னாடி மட்டும்தான் ராசாத்தியை திட்டித் தீர்ப்பேன். மற்றபடி ஷூட்டிங்ல நான், ராசாத்தி, கண்மணி எல்லோரும் செம ஜாலியாக அரட்டை அடிப்போம். அதிலும் ராசாத்தி என் பொண்ணு மாதிரி. இந்த மாதிரி ஜாலியான என்னை இப்படி கொடுமைக்கார மாமியாராக இந்த கதாபாத்திரம் மாத்திடுச்சு. சொந்த ஊர் கொச்சின். மாமியார், கணவர், ஒரே ஒரு செல்ல மகள்னு சின்னக் குடும்பம்.

மலையாளத்தில் 15-க்கும் மேல படங்களில் நடித்துவிட்டேன். நிறைய விளம்பரப் படங்களிலும் கவனம் செலுத்திக்கிட்டு வர்றேன். இப்போ ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ சீரியலுக்கு கிடைத்து வரும் வரவேற்பே தனிதான். மம்முட்டி சார், இயக்குநர் சித்தி சார் படங்கள் என்று மலையாளத்தில் நிறைய கவனம் ஈர்த்தாலும் சினிமாவில் அங்கே எனக்கென்று நெருக்கமான தோழிகளே இல்லை. தமிழில் இந்த சீரியலுக்குள் வந்ததுக்கு அப்புறம் ராசாத்தி, கண்மணி, மங்கை என்று நல்ல நல்ல தோழிகள் கிடைச்சிருக்காங்க. இந்த வரவேற்பும், அனுபவத்தோடும் இப்போ விஜய் டி.வி-யில் ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற சீரியலுக்கு உள்ளே வந்திருக்கிறேன்!’’ என்கிறார் பிந்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x