Last Updated : 17 Jan, 2019 08:37 PM

 

Published : 17 Jan 2019 08:37 PM
Last Updated : 17 Jan 2019 08:37 PM

விஜய் ஆண்டனியின் தமிழரசன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள 'தமிழரசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

'திமிரு புடிச்சவன்' படத்தைத் தொடர்ந்து 'கொலைகாரன்', 'அக்னி சிறகுகள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் ஆண்டனி.

'தமிழரசன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதி செய்யவுள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். முதன் முறையாக மற்றொரு இசையமைப்பாளர் நாயகனாக நடிக்கும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நாளை (ஜனவரி 18) தொடங்கவுள்ளது. விஜய் ஆண்டனியுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x