Published : 17 Jan 2019 05:28 PM
Last Updated : 17 Jan 2019 05:28 PM

#10YearChallenge: புகைப்படத்தோடு மனைவியைக் கலாய்த்த சாந்தனு; ஜாலியாக மிரட்டிய கீர்த்தி

சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவ்வப்போது சில விஷயங்களை ட்ரெண்டாக்குவது வழக்கம். ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கருப்பு வெள்ளை புகைப்பட சேலஞ்ச், பேர்ட்பாக்ஸ் சேலஞ்ச், ஃபயர் சேலஞ்ச் என ஏராளமான சேலஞ்ச்கள் நெட்டிசன்களிடையே உலகப் புகழ் பெற்றுள்ளன. இவற்றை திரை நட்சத்திரங்களும் தொழிலதிபர்களும் கூட முயற்சித்துள்ளனர்.

இந்த வகையில் சில நாட்களாக #10YearChallenge வலைதளங்களைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சேலஞ்சில் 10 வருடங்களுக்கு முந்தைய தங்களின் புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து நெட்டிசன்கள் பகிர்கின்றனர்.

இந்த வகையில் நடிகர் சாந்தனு, 10 வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டுப் பெண்களோடு தான் நடித்த படத்தின் காட்சியையும் தற்போது மனைவி கீர்த்தியுடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், 'இதுதான் வாழ்க்கை, இப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். ஐயய்யோ இன்னிக்கு ராத்திரி என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே!' என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு தொகுப்பாளரும் சாந்தனுவின் மனைவியுமான கீர்த்தி, 'சிறப்பான தரமான சம்பவங்களை இனிமே தான் பார்க்கப் போறே! #10YearChallenge' என்று ஜாலியாக மிரட்டியுள்ளார்.

இவர்கள் இருவரின் ட்வீட்டுகளும் இணையவாசிகளின் மத்தியில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x