Published : 20 Dec 2018 04:57 PM
Last Updated : 20 Dec 2018 04:57 PM

என்னைச் சிரிக்க வைப்பவன் நீ- ஆண் நண்பரோடு இருக்கும் படத்தை வெளியிட்டு ஸ்ருதிஹாசன் உருக்கம்

 

 

பிரிட்டிஷ் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த ஸ்ருதிஹாசன், 'என்னை சிரிக்க வைப்பவன் நீ' என்று தெரிவித்துள்ளார்.

 

பிரபல நடிகை ஸ்ருதிஹாசனும் பிரிட்டிஷ் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக ஆதவ் கண்ணதாசன் - வினோதினி சுரேஷ் திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.

இத்தாலியரான மைக்கேல் கார்சலே பட்டு வேட்டி, சட்டையுடனும் ஸ்ருதிஹாசன் பட்டுப்புடவையிலும் திருமணத்துக்கு வந்தனர். இதில் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இது சினிமா ஆர்வலர்களிடையே விவாதத்தைக் கிளப்பியது.

 

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலேவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன், ''என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது'' என்று தெரிவித்துள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x