Published : 25 Aug 2018 08:46 AM
Last Updated : 25 Aug 2018 08:46 AM

ஒரே வாரத்தில் 7 படங்கள் ரிலீஸ்?

அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸாவதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிப்படி, ஒரு வாரத்தில் ஒரு பெரிய படம் மற்றும் இரண்டு சின்ன படங்கள் மட்டும்தான் ரிலீஸாக வேண்டும். சின்ன படங்கள் இல்லையென்றால், இரண்டு பெரிய படங்களை ரிலீஸ் செய்து கொள்ளலாம்.

ஆனால், இந்த விதி பின்பற்றப்படுகிறதா என்பது சந்தேகம்தான். இந்த மாதம் முதல் வாரத்தில் மட்டும் 10 படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. அதேபோல் வருகிற வாரமும் ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் 7 படங்கள் ரிலீஸாவதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம்பிரபு நடித்துள்ள ‘60 வயது மாநிறம்’, பா.விஜய் நடித்துள்ள ‘ஆருத்ரா’, சமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’, அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா நடித்துள்ள ‘நரகாசூரன்’, சோமசுந்தரம் நடித்துள்ள ‘வஞ்சகர் உலகம்’, தினேஷ், மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘அண்ணணுக்கு ஜே’ ஆகிய படங்கள்தான் அவை.

இதில், எத்தனைப் படங்கள் தியேட்டர் கிடைக்காமல் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் எனத் தெரியவில்லை. படங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்றுதான் தயாரிப்பாளர் சங்கம் விதியைக் கொண்டு வந்தது. ஆனால், அதைப் பின்பற்றாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x