Last Updated : 26 Oct, 2017 12:16 PM

 

Published : 26 Oct 2017 12:16 PM
Last Updated : 26 Oct 2017 12:16 PM

வேலைக்காரன் படத்தின் எடிட்டர் மாற்றம்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் எடிட்டராக ரூபன் மாற்றப்பட்டு இருக்கிறார்.

ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'வேலைக்காரன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் பாடல்காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கப்பட்டதிலிருந்து எடிட்டராக பணிபுரிந்து வந்தார் விவேக் ஹர்ஷன். தற்போது இப்படத்தின் எடிட்டராக ரூபன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் வெளியான பட விளம்பரங்கள் அனைத்திலுமே ரூபனின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

கிறிஸ்துமஸ் தின விடுமுறையை கணக்கில்கொண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபாரம் தொடங்கி, நடைபெற்று வருகிறது. மேலும், அதற்கான திரையரங்க ஒப்பந்தங்களும் தொடங்கிவிட்டன.

நயன்தாரா, ஃபகத் பாசில், விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனோடு நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x