Last Updated : 26 Oct, 2017 10:41 AM

 

Published : 26 Oct 2017 10:41 AM
Last Updated : 26 Oct 2017 10:41 AM

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் பட ஒளிப்பதிவாளராக கிரிஷ் ஒப்பந்தம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின்  ஒளிப்பதிவாளராக கிரிஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இப்படத்தின் கதைக்கு திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் 'சோலோ', 'அங்காமலே டைரிஸ்' மற்றும் 'கலி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவின் மூலம் பிரபலமானவர் கிரிஷ் கங்காதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x