Published : 12 Oct 2022 12:33 PM
Last Updated : 12 Oct 2022 12:33 PM
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. அவர் பதிவிட்டுள்ள கருத்தை ஏற்று ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
இசையமைப்பாளராக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார். ‘பிச்சைக்காரன்’, ‘சலீம்’, ‘கோடியில் ஒருவன்’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதும் இவர் ’கொலை’, ‘ரத்தம்’, ‘வள்ளிமயில்’, ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சினைன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க” என தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு சம்பவம் பற்றியும் குறிப்பிடாமல், பொதுவான அறிவுரையாக விஜய் ஆண்டனி இப்பதிவை வெளியிட்டுள்ளார். இதனை ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க
— vijayantony (@vijayantony) October 11, 2022
அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க
கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க
Sign up to receive our newsletter in your inbox every day!