Published : 03 Oct 2021 03:03 PM
Last Updated : 03 Oct 2021 03:03 PM
'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இதர படங்களின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
முதலில் இந்தப் படம் அக்டோபர் 13-ம் தேதி வெளியாவதாக இருந்தது. பின்னர் பல்வேறு மாவட்டங்கள், நாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் வெளியீட்டை ஒத்திவைத்தது. இதனைத் தொடர்ந்து இதர படங்கள் யாவுமே பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தின. தெலுங்கில் மட்டும் 'பீம்லா நாயக்', 'சர்காரு வாரி பாட்டா', 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
இதனிடையே, 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ஜனவரி 7-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இதனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.
'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால் அந்தப் படத்துடன் போட்டியிட வேண்டாம் என்று சில படங்கள் பின்வாங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷ்யாம்' தங்களது வெளியீட்டில் மாற்றமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
Experience India’s Biggest Action Drama, #RRRMovie in theatres worldwide on 7th Jan 2022. #RRROnJan7th
— RRR Movie (@RRRMovie) October 2, 2021
An @ssrajamouli Film. @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies @PenMovies @jayantilalgada @LycaProductions pic.twitter.com/wKtnfeCJN7
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT