Last Updated : 03 Aug, 2018 09:58 AM

 

Published : 03 Aug 2018 09:58 AM
Last Updated : 03 Aug 2018 09:58 AM

வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘ஜெயில்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்துக்கு ‘ஜெயில்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.

வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது நாயகனாக வசந்தபாலன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதில் ராதிகா, ‘பசங்க’ பாண்டி, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி, ஜெனிஃபர், மணிமேகலை, 'பாகுபலி' வில்லன் பிரபாகர் உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்திருக்கிறார்கள்.

இதுவரை பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இந்த படத்துக்கு, தற்போது ‘ஜெயில்’ என பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். முழுக்க ஹவுஸிங் ஃபோர்டு பின்னணியில் இப்படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்துக்குக் கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.ராமகிருஷ்ணனும், பாக்கியம் சங்கரும் வசனம் எழுதியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு ;நடக்கும் என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணியில் கவனம் செலுத்தப் படக்குழு முடிவு செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x