Published : 24 Apr 2024 06:09 AM
Last Updated : 24 Apr 2024 06:09 AM

ஷூட்டிங்கில் நடிகர் ஸ்ரீமுரளி காயம்

பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் ஸ்ரீமுரளி. இவர் இப்போது பஹீரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மைசூருவில் நடந்து வருகிறது. சண்டைக் காட்சியின் போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீமுரளியின் வலது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்து பார்த்ததில் பெரிய காயம் ஏதுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். சிலநாட்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து பெங்களூரு திரும்பிய ஸ்ரீமுரளி, தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகின்றனர். பஹீரா படத்தை டி.ஆர்.சூரி இயக்குகிறார். இந்தப்படத்தில் ருக்மணி வசந்த், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x