Published : 14 Aug 2022 06:43 AM
Last Updated : 14 Aug 2022 06:43 AM

தங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.4,914 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.39,312-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42,528க்கு விற்பனையாகிறது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.64,800 ஆக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x