Published : 22 Jun 2022 06:18 AM
Last Updated : 22 Jun 2022 06:18 AM
புதுடெல்லி: சென்ற ஆண்டில் மட்டும் இந்தியா 75 டன் தங்கத்தை மறுசுழற்சி செய்துள்ளது என்றும் அந்த வகையில் தங்கத்தை மறுசுழற்சி செய்வதில் இந்தியா உலகின் நான்காவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்றும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
‘தங்க சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி’ அறிக்கையை உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ளது. தங்க மறுசுழற்சியில் சீனா முதல் இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டில் சீனா 168 டன் தங்கத்தை மறுசுழற்சி செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் இத்தாலியும் (80 டன்), மூன்றாம் இடத்தில் அமெரிக்காவும் (78) உள்ளன. 75 டன் தங்கத்தை மறுசுழற்சி செய்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் தங்க சுத்திகரிப்பு அளவு 2013-ல் 300 டன்னாக இருந்தது. 2021-ல் அது 1500 டன்னாக உயர்ந்துள்ளது. 2013-ல் அமைப்புசார் தங்க சுத்திகரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 5-க்கும் குறைவாக இருந்தன. 2021-ல் அது 33 ஆக உயர்ந்துள்ளன.
இளம் தலைமுறையினர் குறுகிய காலத்திலேயே பழைய தங்க நகையைக் கொடுத்து புதிய மாடல்களை வாங்குவதால் தங்க மறுசுழற்சி அதிகரித்திருப்பதாக அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT