Last Updated : 30 Mar, 2016 10:56 AM

 

Published : 30 Mar 2016 10:56 AM
Last Updated : 30 Mar 2016 10:56 AM

ராணுவ தளவாடங்களை இடைத்தரகர்கள் மூலமாக வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்: அனில் அம்பானி கருத்து

ராணுவத்துக்குத் தேவையான போர்க் கருவிகள், தளவாடங்களை இடைத்தரகர்கள் மூலமாக வாங்கு வதைத் தவிர்கக வேண்டும் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி குறிப் பிட்டுள்ளார். தனியார் நிறுவனங் களிடமிருந்து பாதுகாப்புத் துறைக் கான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்கிறபோது அதிக தெளிவுடன் இருக்க வேண்டும் என்று நேற்று குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தொழில்துறையில் போட்டி எல்லோருக்கும் ஏது வானது. ஆனால் தயாரிப்பு அனுபவம் மற்றும் முன்மொழியும் தொகைக்கு கொள்முதல் செய்வது உள்ளிட்டவற்றை பொறுத்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அசோசேம் ஏற்பாடு செய்தி ருந்த பாதுகாப்பு துறை சார்ந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் அனில் அம்பானி குறிப்பிட்டார்.

தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கிறபோது தெளி வான வழிகாட்டுதல்கள் அவசிய மாகும். எதிர்கால வாய்ப்புகளுக் கேற்ப சிறந்த தன்மையை உரு வாக்க வேண்டும். அதே நேரத்தில் தனியார் துறையின் பங்களிப்பு இல்லாமல் நம்பகமான பாதுகாப்பு கொள்கையை உருவாக்கவும் முடியாது என்று குறிப்பிட்டார்.

ரிலையன்ஸ் குழுமம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிபாவவ் பாதுகாப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியது. இந்த நிறுவனம் ராணுவம் மற்றும் விண்வெளித் துறைக்குத் தேவையான கருவிகள் உற்பத்தி யில் முக்கிய இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது திருத்தப்பட்ட கொள்கையால் ஒரு நபர் ஆதிக்கம் குறைந்து பல புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இதன் மூலம் போட்டி அதிகத்துள்ளது என்று அம்பானி கூறினார். கடந்த 22 மாதங்களில் பாதுகாப்பு கையகப்படுத்தல் குழு ரூ. 2,00,000 கோடிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த துறையில் பல தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போதைய ஆர்டர்களைப் பொறுத்து 20 ஆண்டுகளுக்கு சப்ளை செய்யலாம் என்றார்.

இஸ்ரேல் நிறுவனத்துடன் கூட்டு

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் இஸ்ரேல் நிறுவனத்துடன் சேர்ந்து பாதுகாப்பு கருவிகள் தயாரிக்க உள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த ரபேல் அட்வான்ஸ்டு டிபன்ஸ் சிஸ்டம்ஸ் என்கிற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஏவுகணைகள் தயாரிக்க உள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு பத்து ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடியாகும். முதன்மை உதிரிபாக உற்பத்தியாளரோடு இந்திய நிறுவனம் ஒன்று மிகப்பெரிய ஒப்பந்தத்தில் ஈடுபடுவது இது முதல் முறையாகும். ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் 49 சதவீத உரிமையை வைத்திருக்கும். இந்திய பாதுகாப்புத் துறைக்குத் தேவையான கருவிகளை மிக அதிக அளவில் உற்பத்தி செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x