Published : 03 Feb 2016 10:28 AM
Last Updated : 03 Feb 2016 10:28 AM

டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சி இன்று தொடங்குகிறது: 80 புதிய கார்கள் அறிமுகம்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்தக் கண்காட்சியில் 80 புதிய மாடல் கார்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

கண்காட்சியின் முதல் இரண்டு நாட்கள் ஊடகம் மற்றும் துறை சார்ந்த நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பொதுமக் கள் இக்கண்காட்சியை பார்ப்பதற்கு பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐ ஏஎம்), ஆட்டோமோட்டிவ் பாகங் கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஏசிஎம்ஏ), இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகிறார்கள். இந்தக் கண்காட்சி நொய்டாவில் இந்திய எக்ஸ்போ மார்ட்டில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்று எஸ்ஐஏஎம் தலைவர் வினோத் கே தேசாரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஏற்பட்டுள்ள அதிக மாசுபாட்டை தடுப்பதற்காக உச்ச நீதிமன்றம், 2,000 சிசி-க்கும் அதி கமாக உள்ள இன்ஜின் கொண்ட எஸ்யுவி (டீசல்) ரக கார்களுக்கு சமீபத்தில் தடை விதித்தது.

இந்த தடையால் ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி நடைபெற இருக்கிறது.

மற்ற நிறுவனங்களை காட்டி லும் மாருதி சுஷூகி இந்தியா, மஹிந்திரா, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, ஹோண்டா கார்ஸ் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஆடி போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் பங்குபெறுகின்றன.

ஜீப், பொலாரிஸ் மற்றும் இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான பெனலி (Benelli) ஆகிய நிறுவனங்கள் புதிதாக இந்தக் கண்காட்சியில் பங்குபெறுகின்றன.

பஜாஜ் ஆட்டோ, டைம்லர் இந்தியா கமர்ஷியல் வாகனங்கள் (டிஐசிவி), ராயல் என்ஃபீல்டு, ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறு வனங்கள் இந்த கண்காட்சியில் பங்குபெறவில்லை.

இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள அதிக செலவு ஆகிறது என்று கடந்த திங்கள் கிழமை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் கண்காட்சியை காண்பதற்கு 7 லட்சம் பார்வை யாளர்கள் வருவார்கள் என்று கண்காட்சி ஒருங்கிணைப்பா ளர்கள் கருதுகின்றனர். கடந்த கண்காட்சியின் போது 5.6 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்காட்சியில் 65 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கார்கள் மற்றும் பைக்குகளை அறிமுகம் செய்கின் றனர். கடந்த கண்காட்சியில் 55 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு 70 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தினர். அதே போல கண்காட்சி நடைபெறும் இடத்தையும் 73,000 சதுர அடியாக விரிவுபடுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x