Published : 02 Feb 2016 10:20 AM
Last Updated : 02 Feb 2016 10:20 AM

நீருக்கு அடியில் உணவகம்.. அகமதாபாதில் திறப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நீருக்கு அடியில் உணவு விடுதி (ரெஸ்டாரென்ட்) ஒன்று திறக்கப்பட்டுள்ளது. உணவுப் பிரியர்களின் ரசனைக்கு தீனி போடும் வகையில் நிலத்துக்கு அடியில் 20 அடி ஆழத்தில் இந்த உணவு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவு விடுத்திக்கு தி ரியல் பொசெய்டோன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான பாரத் பட் இந்த புதிய உணவு விடுதியைத் தொடங்கியுள்ளார். இதில் ஒரே சமயத்தில் 32 பேர் அமர்ந்து உணவருந்த முடியும். இதில் தாய்லாந்து, மெக்சிகன் உள்ளிட்ட வெளிநாட்டு உணவு வகைகளோடு இந்திய உணவு வகைகளும் கிடைக்கும். இந்த உணவு விடுதியில் சைவ உணவு வகைகள் மட்டும்தான் கிடைக்கும்.

பிரத்யேகமாக வடிவமைக் கப்பட்ட இந்த உணவு விடுதியைச் சுற்றி 1.60 லட்சம் லிட்டர் தண்ணீர் உள்ளது. இதில் 4 ஆயிரம் வகையான மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் வளர்க்கப்படுகின்றன.

கண்ணாடி மூலம் நீர் வாழ் உயிரிகளை பார்த்து ரசித்தபடியே சூடாக சுவைக்க வகை செய்துள்ளார் பட்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x