Published : 25 Feb 2016 11:02 AM
Last Updated : 25 Feb 2016 11:02 AM

இவரைத் தெரியுமா? - ஆஷிஸ் கண்ணா

$ டாடா பவர் சோலார் சிஸ்டத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். 2015-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

$ இதற்கு முன் டாடா பவர் நிறுவனத்தின் கார்ப்பரேட் காண்ட்ராக்ட் அமைப்பின் தலைமை அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

$ 2013ம் ஆண்டிலிருந்து டாடா பவர் சோலார் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

$ பெக்டெல், இன்ஜினீயர்ஸ் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.

$ டாடா பவர் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

$ டெல்லி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் இன்ஜினீயரிங் பட்டமும் டெல்லி இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் மேலாண்மை மற்றும் அமைப்புமுறை பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x