Last Updated : 24 Feb, 2016 09:32 AM

 

Published : 24 Feb 2016 09:32 AM
Last Updated : 24 Feb 2016 09:32 AM

550 கிலோ அரிசி பை: கின்னஸ் சாதனையில் ‘இந்தியா கேட்’

இந்தியா கேட் பாசுமதி அரிசி கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்ட 550 கிலோ அரிசி பை அதிக எடையுள்ள அரிசி பை பிரிவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியா கேட் கிளாஸிக் பாசுமதி அரிசி பிராண்ட் இந்த சாதனையை பெற்றுள்ளது.

பிப்ரவரி 21ம் தேதி முதல் துபாயில் நடைபெற்றுவரும் உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கண்காட்சி பிப்ரவரி 25வரை நடக்கிறது. இந்த புதிய சாதனையை இந்திய கேட் பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்களான கேஆர்பிஎல் நிறுவனத்தினர் சாதித்துள்ளனர்.

இந்த அரிசி பையை துபாயில் உள்ள தங்களது கிடங்கில் ஒரே நாளில் நிரப்பியுள்ளனர். இது குறித்து பேசிய இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினரான பிரியங்கா மிட்டல் ‘கின்னஸ் சாதனை புத்தகக் குழுவினர், எங்களது இடத்துக்கு வந்து இந்த சாதனையின் அனைத்து நிலைகளையும் சரி பார்த்தனர்’ என்று கூறினார். மேலும் இந்த சாதனையின் அடுத்த நாள் கின்னஸ் சாதனை புத்தகக் குழுவினர் சாதனைக் கான பதிவுச் சான்றிதழை நிர்வாகத்திடம் வழங்கினர்.

இந்த கண்காட்சி முடிந்ததும் இந்த சாதனை பையை சில முக்கிய சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்களில் காட்சிக்கு வைக்க உள்ளோம். அதற்கு பிறகு இந்த அரிசியை ஊழியர்களுக்கு சமைத்து கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார். கேஆர்பிஎல் நிறுவனம் இந்திய கேட் பாசுமதி அரிசிக்காக 2015-ம் ஆண்டில் உலக அளவில் சிறந்த பிராண்ட் மற்றும் நிறுவனம் என்று ஆசியா மற்றும் அரபு நாடுகளின் விருதை வாங்கியுள்ளது.

இந்த நிறுவனம் சர்வதேச அளவில் விநியோகம் செய்வதற் காகவும், வெளிநாடுகளில் புதிய விரிவாக்கத்துக்காகவும் கல்ஃப் புட்ஸ் கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.

இந்த சாதனையை துபாய் சர்வதேச வர்த்தக மையம் வரவேற்றுள்ளது. இந்த நிறுவனம் கல்ஃப் புட்ஸ் கண்காட்சிக்காக 120 நாடுகளிலிருந்து 5,000த்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கின்னஸ் சாதனை, கண்காட்சிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதற்காக கல்ஃப் புட்ஸ் மகிழ்ச்சி கொள்கிறது என்று இந்த கண்காட்சியின் இயக்குநர் மார்க் நேபியர் தெரிவித்துள்ளார். கல்ஃப் புட்ஸ் 2016 கண்காட்சியில் நாடுகள் அளவில் தொழில்துறை அளவிலும் பெரிய நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x