Published : 22 Nov 2015 12:20 PM
Last Updated : 22 Nov 2015 12:20 PM

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன சொத்துகள் ஏலம்

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத் துக்கு கடன் கொடுத்த வங்கிகள், அந்த நிறுவனத்தின் சொத்துகளை ஏலம் விட முடிவு செய்துள்ளன. கிங்பிஷர் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 7,000 கோடிக்கு மேல் கடன் கொடுத்த வங்கிகள் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கார்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.

இந்த விற்பனை குறித்த ஏல அறிவிப்பு சனிக்கிழமை வெளிவந்துள்ளது. டிசம்பர் 7-ஆம் தேதி இணையதளம் மூலம் ஏலம் நடைபெற உள்ளது. கடன் பிரச்சினை காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு ரூ.6,963 கோடி கடன் உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இதில் அதிக கடன் வழங்கியுள்ளது. இந்த கடன் 15.5 சதவீத ஆண்டு வட்டியோடு சேர்த்து ரூ.7,000 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த ஏலத்துக்கான முன் வைப்பு தொகையாக 65 லட்சம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது மொத்த கடன் தொகையில் 0.01 சதவீதம் ஆகும். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் லைசன்ஸ் ரத்தாகும் வரை, கடந்த மூன்று ஆண்டுகளாக கடன் வழங்கிய வங்கிகள் பல முறை கடிதம் எழுதியுள்ளன.

இதற்கு முன்னர் மும்பை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கிங்பிஷர் நிறுவனத்தின் கட்டடத்தை ஸ்டேட் பாங்க் தங்கள் வசம் எடுத்துள்ளது. ஆனால் தற்போது இக்கட்டிடம் ஏலம் விடப் படவில்லை. இது குறித்து பேசிய கடன் வழங்கியுள்ள நிறுவனங்கள் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான அசையும் சொத்துகள் மட்டும் ஏலம் விடப்பட உள்ளதாக கூறியுள்ளன. டெம்போ டிராவலர்ஸ், டிராக்டர்கள், எஸ்யுவி கார்கள், லக்கேஜ் ட்ராலிகள், விமான இழுவை வாகனங்கள் மற்றும் இதர ஹைட்ராலிக் படிக்கட்டுகள் போன்றவை இந்த ஏலத்தில் அடங்கும் என்று கூறியுள்ளன.

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் பிரூவரீஸ் இரண்டு நிறுவனங்களும் வேண்டு மென்றே பணத்தை திருப்பித் தராதவர்கள் என்று கடந்த வாரத் தில் பாரத ஸ்டேட் பாங்க் கூறி யிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x