Published : 14 Feb 2015 12:40 PM
Last Updated : 14 Feb 2015 12:40 PM

சாம் வால்ஷ் - இவரைத் தெரியுமா?

$ உலகின் இரண்டாவது பெரிய சுரங்க நிறுவனமான ரியோ டின்டோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

$ ஐந்து குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவர். 15 வயதில் இவரது தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார். அதன் பிறகு குடும்ப பொறுப்பை ஏற்றார்.

$ மெல்பர்ன் புறநகர் பகுதியில் பிறந்த இவர், மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றிருக்கிறார்.

$ ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயிற்சியாளராகச் சேர்ந்து, சில காலத்துக்கு பிறகு நிஸான் நிறுவனத்தில் இணைந்தார்.

$ 1991-ம் ஆண்டு ரியோ டின்டோ நிறுவனத்தில் இணைந்தார். 2013-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் இருந்தவர். 2013 ஜனவரியில் குழும தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு தலைமையகமான லண்டனுக்குச் சென்றுவிட்டார்.

$ ஒரு வருடத்தில், ஒரு மாதம் முழுவதும் விமானப் பயணத்திலே இருப்பவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x