Published : 13 Nov 2014 10:20 AM
Last Updated : 13 Nov 2014 10:20 AM

ஜிவிகே ரெட்டி - இவரைத் தெரியுமா?

$ குணபதி வெங்கட கிருஷ்ணா ரெட்டி சுருக்கமாக ஜிவிகே ரெட்டி என்று அழைக்கப்படுபவர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜிவிகே குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்.

$ ரியல் எஸ்டேட், கட்டமைப்பு, மின் உற்பத்தி, விமான நிலைய கட்டுமானம், ஹோட்டல் உள்ளிட்ட துறைகளில் இக்குழும நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது.

$ 1997-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் தனியாரால் தொடங்கப்பட்ட முதலாவது மின் உற்பத்தி நிறுவனம் இவருடையது.

$ உஸ்மானியா பல்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்று தந்தையின் கட்டுமான தொழிலில் இறங்கினார். பின்னாளில் ஹார்வர்டு பல்கலையில் நிர்வாகவியல் பயின்றவர்.

$ நாகார்ஜுன சாகர் அணையை கட்டியதும் இவரது நிறுவனம்தான். 1959-ம் ஆண்டு தொடங்கி 1969-ல் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. கற்களால் கட்டப்பட்ட உலகின் மிகப் பெரிய அணை இதுவாகும்.

$ ஆஸ்திரேலியாவில் உள்ள ஆல்பா நிலக்கரி சுரங்கத்தில் 70 சதவீத பங்குகள் இவரது நிறுவனம் வசம் உள்ளது. எண்ணெய் அகழ்விலும் இவரது நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

$ தனியார் பங்கேற்போடு நடத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையையும் இவரது நிறுவனம்தான் நிர்வகிக்கிறது.

$ விளையாட்டில் தீவிர ஈடுபாடு காரணமாக ஹைதராபாத்தில் டென்னிஸ் அகாதெமியை தொடங்கி இளம் வீரர்களை உருவாக்கி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x