Published : 13 Nov 2014 01:19 PM
Last Updated : 13 Nov 2014 01:19 PM

உலக வர்த்தக ஒப்பந்த சிக்கலில் இந்தியா - யு.எஸ். இடையே இணக்கம்: நிர்மலா சீதாராமன்

வர்த்தக எளிமையாக்குதல் உடன்படிக்கைகளை அமல்படுத்துவதில் இந்தியா - அமெரிக்கா இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "உணவு பாதுகாப்பு விவகாரத்தில் இந்திய விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், வர்த்தகத்தை எளிதாக்கும் உடன்படிக்கைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அமெரிக்கா இசைவு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நிலையை உலக வர்த்தக அமைப்பின் பொதுக் குழு அங்கீகரிக்க உள்ளது. உலக வர்த்தக அமைப்பு பொதுக் குழு கூட்டத்தில் இந்தியாவின் நிலையை அமெரிக்கா ஆதரிக்கும்.

இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் பலவும் ஆதரித்துள்ளன. அமெரிக்காவும் இந்தியாவை புரிந்து கொண்டுள்ளது. இது, உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேற வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x