Published : 20 Jun 2016 09:36 AM
Last Updated : 20 Jun 2016 09:36 AM

ரகுராம் ராஜனின் முடிவு நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பு: தொழில் துறையினர் கருத்து

ரகுராம் ராஜன் இரண்டாவது முறையாக ஆர்பிஐ கவர்னராக நீடிக்கப்போவதில்லை என்று தெரிவித்த பிறகு பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர்.

ரகுராம் ராஜனின் இந்த முடிவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு. பொருளாதார நிலைத்தன்மையை அவர் கொண்டு வந்தவர். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர் என்று பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இன்போஃசிஸ் இணைநிறுவனர் நாராயணமூர்த்தி, ‘‘ரகுராம் ராஜன் இன்னும் இரண்டு முறையாவது கவர்னராக நீடித்திருக்க வேண்டும். ராஜன் மிக மதிப்புமிக்க ஆர்பிஐ கவர்னராக நடந்து கொண்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.

ராஜன் இரண்டாவது முறையாக நீடிக்காதது இந்திய ரிசர்வ் வங்கிக்கு மிகப் பெரிய இழப்பு. பொருளாதார ஸ்திரத்தன்மை மரபை விட்டுச் செல்கிறார் என்று பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு இது மிக சோக மான நாள். அவரது மிகச் சிறந்த திறமையை கூட்டாளி முதலாளித்து வத்தினர் (cronies) அகற்றியுள்ளனர் என்று மோகன்தாஸ் பாய் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள் ளார். ஆர்பிஜி எண்டர்பிரசைஸ் நிறுவனத்தின் ஹர்ஷ் கோயங்கா தனது டிவிட்டர் பக்கத்தில், பண வீக்கத்தின் போராளி, பொருளாதார குரு, தன்னிச்சையான முடிவு, வங்கி அறுவை சிகிச்சை நிபுணர் என்று ரகுராம் ராஜனை பற்றி எழுதியுள்ளார்.

நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறும்போது, “மிகவும் திறன் படைத்த, உலகின் சிறந்த பொருளாதார நிபுணரை நாம் இழக்கிறோம். இது நாட்டுக்குத் துயரம், அரசுக்கு துயரம், ஆர்பிஐ என்பது கூட தன்னாட்சி பெற்ற நிறுவனம் இல்லை போலும்” என்று தொலைக்காட்சி நேர்காணலில் கூறியிருந்தார். அரசு தனது கொள்கை என்னவாக இருக்க விரும்புகிறது என்பதை விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x