Published : 22 Nov 2014 11:47 AM
Last Updated : 22 Nov 2014 11:47 AM

அமெரிக்காவில் தள்ளுபடி விற்பனை: இந்தியாவில் வாங்க இ-பே புதிய வசதி

அமெரிக்காவின் கருப்பு வெள்ளி (பிளாக் ஃபிரைடே) விற்பனையில் பொருள்கள் மிக மலிவாக விற்பனை செய் யப்படும்.

நன்றி தெரிவிக்கும் திருநாள் தள்ளுபடி விற்பனைக்கு அடுத்த படியாக கருப்பு வெள்ளி தின விற்பனை மிகவும் பிரபலமானது. அப்போது பொருள்கள் மிக மலிவாக விற்பனை செய்யப் படும். இந்தியாவில் உள்ள வாடிக் கையாளர்களும் பொருள்களை வாங்குவதற்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இ-பே வழி செய்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் ஷாப்யுவர் வேர்ல்ட்.காம் எனும் இணைய தள நிறுவனத்துடன் கூட்டு சேர்ந் துள்ளது.

நவம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விற்பனையில் இந்தியர்களும் பொருள்களை வாங்க முடியும். அமெரிக்காவிலிருந்து பொருள்கள் இலவசமாக இந்தியாவில் உள்ளவர்களுக்கு டெலிவரி செய்யப்படும். ஆனால் பொருள்ளுக்கு விதிக்கப்படும் வரி மற்றும் சுங்க வரியை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும் என்று இ-பே நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைவர் வித்மே நைனி தெரிவித்துள்ளார்.

இந்திய கரன்சியில் அதாவது ரூபாயில் தொகையை செலுத்த லாம். சுங்கவரி, சர்வதேச கப்பல் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கியதாக செலுத்த வேண்டியிருக்கும்.

அதிகபட்சம் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் பொருள்களை பெற முடியும்.

ஏற்கெனவே பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் பெருமளவிலா தள்ளுபடி விலையில் பொருள் களை விற்பனை செய்துள்ளன.

டிசம்பர் மாதத்தில் கூகுள் நிறுவனம் தனது 3-வது ஆண்டு ஷாப்பிங் திருவிழாவை நடத்த உள்ளது. இதில் பெருமளவிலான நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் கலந்து கொள்ள உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x