Published : 19 Jun 2016 10:15 AM
Last Updated : 19 Jun 2016 10:15 AM

எரிபொருள் சிக்கன விவகாரம்: 960 டாலர் இழப்பீடு வழங்க மிட்சுபிஷி முடிவு

எரிபொருள் சிக்கன அளவீட்டினால் பாதிப்படைந்த தனது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் மிட்சுபிஷி நிறுவனம் 960 டாலர் இழப்பீடு வழங்க இருக்கிறது.

நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி, 2013-ம் ஆண்டிலிருந்து விற்கப்பட்ட இகே மினிகார் மற்றும் நிஸான் லேபிள் ஆகிய மாடல் கார்களுக்கு மைலேஜ் மோசடி தொடர்பான செலவுகளுக்கு 91.3 கோடி டாலர் ஆகும் என்று கூறியிருந்தது. அதுமட்டுமல்லாமல் இன்னும் பிற மிட்சுபிஷி மாடல்களுக்கும் 290 டாலர் இழப்பீடு வழங்குவதாக கூறியுள்ளது.

மிகவும் சிறிய கார்களுக்கு ஜப்பானில் மிகுந்த வரவேற்பு உள்ளது. பொதுவாக இவை அதிகமான மைலேஜை வழங்கும் என்று கூறுவதுண்டு.

டோக்கியோவை மையமாக கொண்டு செயல்படும் மிட்சுபிஷி நிறுவனம் கடந்த பத்தாண்டுகளாக அதிகமான மைலேஜ் தருவ தாகவும் எரி பொருளை சிக்கனப் படுத்த முடியும் என்று பல மாடல் கார் களை விற்றிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. கடந்த 25 வருடங்களாக இந்த மோசடி நடந்திருப்பதாக மிட்சுபிஷி நிறு வனம் ஒத்துக்கொண்டது.

தற்போது ஜப்பான் அரசு அனைத்து கார் தயாரிப்பாளர் களுக்கும் மைலேஜ் சோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x