Published : 07 Sep 2016 10:58 AM
Last Updated : 07 Sep 2016 10:58 AM

இவரைத் தெரியுமா?- ஜான் எல்கான்

இத்தாலியைச் சேர்ந்த மோட்டார் வாகன நிறுவனமான பியட் கிரைஸ்லர் நிறுவனத்தின் தலைவர். 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார். முதலீட்டு நிறுவனமான எக்ஸ்ஸோர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பு வகிக்கிறார்.

இத்தாலியின் துரின் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். இங்கிலாந்து, போலந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் உள்ள பியட் குழும நிறுவனங்களில் உற்பத்தி, விற்பனை மற்றும் சந்தையிடுதல் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் நிறுவன தணிக்கை பணியாளராக 2001-ல் பணிக்குச் சேர்ந்தவர். ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றியவர்.

தி எக்கனாமிஸ்ட் குழுமம், நியூஸ் கார்ப்பரேஷன், பெராரி நிறுவனங்களின் இயக்குநர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இத்தாலிய கலாசார கல்வி நிறுவனமான அஸ்பன் இன்ஸ்ட்டியூட் மற்றும் ஜியோவன்னி அஜெனெல்லி பவுண்டேஷன் நிறுவனங்களின் துணைத் தலைவர் பொறுப்பில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x