Published : 09 Jan 2017 10:32 AM
Last Updated : 09 Jan 2017 10:32 AM

ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரையிலான டெபாசிட் விவரங்களை சமர்ப்பிக்க வங்கிகளுக்கு வருமான வரித்துறை உத்தரவு

ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரை யிலான காலத்தில் செய்யப்பட்ட அனைத்து விதமான டெபாசிட் விவ ரங்களையும் வங்கிகள் சமர்ப்பிக்க வேண்டும் என வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்கு முன் நடந்த பரிவர்த்தனை களை ஆராய வருமான வரித்துறை முடிவெடுத்திருக்கிறது.

மேலும், பான் எண் இல்லாத வங்கி கணக்கு மற்றும் படிவம் 60 (பான் எண் இல்லாதவர்) கொடுத்து வங்கி கணக்கு தொடங்கியவர்களின் தகவலையும் வருமான வரித்துறை கேட்டிருக் கிறது.

புதிய அறிவிப்பின்படி, வங்கி கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் ஆகியவை ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரையிலான டெபாசிட் விவரங்களைத் தெரிவிக்கவேண்டும். இதுவரை பான் எண்ணைச் சமர்ப்பிக்காதவர் களின் தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். தவிர வரும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அவர்கள் பான் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை குறிப்பிட்டிருக்கிறது.

பண மதிப்பு நீக்கத்துக்கு நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரையிலான காலத்தில் சேமிப்பு கணக்கில் ரூ.2.5 லட்ச ரூபாய்க்கு மேலும், நடப்பு கணக்கில் ரூ.12.50 லட்சத்துக்கு மேலும் வைத்திருப்பவர்களி விவரத்தை வருமான வரித்துறை கேட்டிருந்தது. மேலும் ஒரே நாளில் ரூ.50,000-க்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் தகவலையும் வருமான வரித்துறை கேட்டிருந்தது.

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு சுமார் ரூ.15 லட்சம் கோடிக்கு மேலான 500,1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த டெபாசிட்களை வருமான வரித்துறை ஆராய்ந்து வருகிறது.

தகவல்களை ஆராய்கிறது சர்வதேச நிறுவனங்கள்

ரூ.15 லட்சம் கோடி வங்கிகளுக்கு வந்ததை அடுத்து, வங்கி தகவல்களை ஆராய சர்வதேச வரி ஆலோசனை நிறுவனங்களை நியமிக்க வருமான வரித்துறை திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

இஒய், கேபிஎம்ஜி மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வருமான வரித்துறை பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு 60 லட்சம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டும் ரூ.7 லட்சம் கோடியை டெபாசிட் செய்துள்ளது. இதில் ரூ.4 லட்சம் கோடியை தனிநபர்கள் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள்.

ஜன்தன் வங்கிகள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை, முறைகேடாக வங்கியில் செலுத்தப்பட்ட தொகை, கடனை அடைத்தவர் கள் விவரம் என பல தகவல்களை வருமான வரித்துறை வைத்துள்ளது. இப்போது வரி ஆலோசனை நிறுவனங்கள் உதவியுடன் இந்த பரிவர்த்தனைகளை ஆராய முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x