Last Updated : 12 Jul, 2016 09:52 AM

 

Published : 12 Jul 2016 09:52 AM
Last Updated : 12 Jul 2016 09:52 AM

சீன நிறுவனங்களை விட இந்திய நிறுவனங்கள் வெளிப்படையாக உள்ளன: ஆய்வில் தகவல்

நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையில் சீன நிறுவனங்களை விட இந்திய நிறுவனங்கள் சிறப் பாக உள்ளன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் நிறுவனங்கள் அதிகபட்ச வெளிப் படைத்தன்மையுடன் உள்ளன. சீன நிறுவனங்களிடம் வெளிப் படைத்தன்மை இல்லை என்று சர்வதேச வெளிப்படைத் தன்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்வதேச வெளிப்படைத் தன்மை அமைப்பு நேற்று அந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. ரஷ்யா, பிரேசில், மெக்ஸிகோ உள்ளிட்ட வளர்ந்து வரும் 15 நாடுகளிலிருந்து 100 நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. மொத்த நிறுவனங்களில் இந்தியாவின் 19 நிறுவனங்கள் தங்களது நிறுவன அமைப்பு மற்றும் முதலீடுகளின் வெளிப்படை விஷயத்தில் 75 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளன. இந்திய நிறுவனச் சட்டம் இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்த ஆய்வில் சீன நிறுவனங்கள் மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது. சீனா நிறுவனங்கள் 10 புள்ளிகளுக்கு 1.6 புள்ளிகளே பெற்றுள்ளன. நலிவுற்ற நிலை, ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் செயல்படுத்த முடியாத நிலையில் இருப்பதுதான் இதற்கு காரணமாக உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் அதிக அளவாக 37 சீன நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. ஆனால் ஒட்டுமொத்த செயல்பாடுகளில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. அனைத்து சீன நிறுவனங்களிலும் குறிப்பாக மோட்டார் வாகன நிறுவனமான செர்ரி, அப்ளையன்ஸ் நிறுவனமான கிளான்ஸ், ஆட்டோ உதிரிபாக நிறுவனமான வான்ஸிங் குழுமம் என மூன்று நிறுவனங்கள் 10 க்கு ஒரு புள்ளியை கூட பெறவில்லை. சீன நிறுவனங்களின் இந்த நிலைக்கு காரணம் ஊழலுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த முடியாத நிலையில் இருப்பதுதான் அல்லது சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப விவரங்களை அளிக்கவில்லை என்று சர்வதேச வெளிப்படைத்தன்மை நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பட்டியலில் கடைசி 25 இடங்களை சீன நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

இன்னொரு பக்கம் இந்திய நிறுவனங்கள் பட்டியலில் முன்னணி இடங்களை பிடித்துள்ளன. நிறுவனங்களின் நிதி நிலை விவரங்களை கோருவதில் அரசின் கறாரான சட்டங்கள் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு துணை நிறுவனங்களிலும் இது கடை பிடிக்கப்படுகிறது.

தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் முதல் இடத்தில் உள்ளது. 10க்கு 7.3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ஆறு இடங்களை டாடா குழுமம் மற்றும் விப்ரோ நிறுவனம் பெற்றுள்ளது. முதல் 25 பட்டியலில் ஒரே ஒரு சீன நிறுவனமான தொலைத்தொடர்பு உதிரிபாக நிறுவனமான இஸட்டிஇ நிறுவனம் இடம்பிடித்துள்ளது.

இந்த ஆய்வின் மூலம் ஒரு பரிதாபமான நிலையை கண்ட றிந்துள்ளோம் என்று சர்வதேச வெளிப்படைதன்மை அறிக்கை கூறியுள்ளது மேலும் உடனடி தேவையும் சர்வதேச நிறுவனங் களுக்கு தேவையாக இருப்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை கள்தான் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x