Published : 12 Jul 2016 10:00 AM
Last Updated : 12 Jul 2016 10:00 AM

சென்செக்ஸ் 500 புள்ளிகள் ஏற்றம்

இந்தியப் பங்குச் சந்தைகள் 11 மாதங்களுக்கு பிறகு நேற்று அதிக புள்ளிகள் ஏற்றத்தைக் கண்டன. அமெரிக்க வேலை வாய்ப்பு அறிக்கை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்ததைத் தொடந்து இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டன.

நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் உயர்ந்து 27626 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 144 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8467 புள்ளிகளில் முடிந்துள்ளது.

நேற்றைய வர்த்தக முடிவில், இதுவரை இல்லாத அளவில் மிட் கேப் பங்குகள் 1.5 சதவீத உயர்வைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட பங்குகளில் 1721 பங்குகள் ஏற்றத்தையும், 1042 பங்குகள் சரிவையும் கண்டன.

நேற்றைய வர்த்தகத்தில் வங்கிப் பங்குகள் அதிகபட்ச ஏற்றத்தைக் கண்டன. பேங்க் ஆப் பரோடா பங்கு 4.91 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி பங்கு 3.27 சதவீதமும் ஏற்றம் கண்டன. நிப்டி பேங்க் குறியீடு 2.08 சதவீதம் உயர்ந்தது. ஆட்டோ துறையின் ஏற்றமும் முன்னிலையில் இருந்தது.

ஜப்பான் மற்றும் ஆஸ்தி ரேலிய தேர்தல் முடிவுகள் காரண மாக ஆசிய சந்தைகள் ஏற்றத் தில் உள்ளன. இதர நாடுகளின் செயல்பாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவின் செயல்திறன் சிறப்பாக இருக்கிறது. இதற்கு ஏற்ப உள்நாட்டு பங்களிப்புகளும் உள்ளது என்று இனாம் ஹோல் டிங்க்ஸின் தர் சிவராமன் கூறியுள் ளார். பங்குச் சந்தை மேலும் 5 சத வீதம் அல்லது 7-8 சதவீத வளர்ச் சியை நோக்கிச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

2015 ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு பிறகு சந்தை கண்டுள்ள அதிகபட்ச ஏற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x