Published : 08 May 2018 09:53 AM
Last Updated : 08 May 2018 09:53 AM

ஜியோ நிறுவனத்தில் ரூ.60,000 கோடி முதலீடு செய்ய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்: மேலும் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கவும் முடிவு

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமில் ரூ.60,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பிராட்பேண்ட் மற்றும் கம்பியில்லா சேவைகளை வழங்கும் வேகத்தை அதிகரிக்க உள்ளது.

இதுதவிர மேலும் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு கடன் பெறவும் ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த கேள்விகளுக்கு ஜியோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்தித் தொடர்பாளர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவ ில்லை.

சேவைகளுக்கான விலையை அதிகரிப்பது குறித்து மற்ற நிறுவனங்கள் யோசித்து வருவதாகவும், ஜியோ குறைந்த விலையில் சேவை அளித்துவருவதால், விலையை உயர்த்துவது மற்ற நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்பொழுது ரிலையன்ஸ் ஜியோ தனது தொலைத்தொடர்பு சேவைகளுக்கு வசூலித்துவரும் அதே கட்டணத்தை பிராட்பேண்ட் சேவைகளுக்கும் வசூலிக்கும் வகையில் திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் பிராட்பேண்ட் சந்தையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி யுள்ளன.

2017-2018 நிதியாண்டின் கடைசி காலாண்டில் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து ஜியோ நிறுவனத்துக்கு கிடைக்கும் வருவாய் ரூ.154-ல் இருந்து ரூ.137-ஆக குறைந்துள்ளது. இருப்பினும் இது ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களை விட அதிகமாகும். 2017-2018 நிதியாண்டின் கடைசி காலாண்டில் மட்டும் 90 லட்சம் பேர் ஜியோ நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளனர். தொலைத் தொடர்புத் துறையின் வருவாயை தனது அதிகபட்ச சந்தை மதிப்பின் மூலம் ஜியோ கட்டுக்குள் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மற்ற நிறுவனங்களின் வருவாய் தொடர்ந்து குறையும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ ஃபைபர் என்ற பிராட்பேண்ட் சேவையை ஜியோ நிறுவனம் சில குறிப்பிட்ட இடங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. 1.1 டெரா பைட் அளவுக்கான டேட்டா இந்தத் திட்டத்தில் இணைபவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஓரிரு மாதங்களில் இது நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. ஏற்கெனவே நாடு முழுவதும் 3,00,000 கிலோமீட்டருக்கு ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க்கை இந்த நிறுவனம் அமைத்துள்ளது. 10 கோடி வீடுகளை ஜியோ ஃபைபர் திட்டத்துக்குள் கொண்டுவர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x