Published : 02 Oct 2023 07:23 PM
Last Updated : 02 Oct 2023 07:23 PM

கார்பூலிங்க் ஆப்-க்கு தடையில்லை; சட்டப்பூர்வ அனுமதி தேவை - கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர்

பிரதிநிதித்துவப்படம்

பெங்களூரு: கார்பூலிங்க் ஆப்-களுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், அவை சட்டப்பூர்வமாக செயல்பட தேவையான அனுமதியினைப் பெறவேண்டும் என்றும் கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெளிவு படுத்தியுள்ளார். சட்டவிரோதமாக செயல்படும் கார்பூலிங் ஆப்களை தடுத்து நிறுத்துமாறு கார் மற்றும் ஆட்டோ சங்கங்கள் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அமைச்சரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த கார்பூலிங் ஒருங்கிணைப்பாளர்களுடன் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அமைச்சர் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்

தேஜஸ்வி சூர்யா கடிதம்: கார்பூலிங்க் ஆப்-களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், கார்பூலிங்க் ஆப்-கள் மீதான தடையை நீக்க ஏதுவாக கர்நாடகா மோட்டார் வாகன விதிகள் 1989-யை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தி மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜ்ஸ்வி சூர்யா ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதி இருந்தார்.

கார்பூலிங்க் ஆப் என்றால் என்ன?: பெங்களூரு சாலைகளில் பீக் ஹவர்ஸ் எனப்படும் முக்கியமான நேரங்களில் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதில் கார்பூலிங்க் ஆப் முக்கிய காரணியாக கருதப்பட்டது. ஏராளமான ஐடி ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலைக்குச் செல்ல இந்த சேவையை நம்பியுள்ளனர்.

இதனிடையே சமீபத்தில் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்கள், கார்பூலிங்க் ஆப், தங்களின் அன்றாட வருமானத்தை பாதிப்பதாக கவலை தெரிவித்திந்ததோடு, இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். கூடுதலாக டாக்ஸி ஓட்டுநர் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களுடன் இணைந்து பெங்களூருவில் ஒரு நாள் பந்த் நடத்தி கர்நாடகா போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டியிடம் கோரிக்கை மனுவும் கொடுத்தனர். ஆட்டோ ஒட்டுநர் சங்கங்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று பைக் டாக்ஸியை தடை செய்வது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x