Published : 29 May 2015 10:13 AM
Last Updated : 29 May 2015 10:13 AM

ஜான் எஃப் கென்னடி 10

உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், மனித உரிமைக்காகக் குரல் கொடுத்தவரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜான் எஃப் கென்னடி (John F Kennedy) பிறந்த தினம் இன்று (மே 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாநிலத் தில் ப்ரூக்ளின் என்ற நகரில் பிறந்தவர் (1917). தந்தை ஒரு தொழிலதிபர். தன் பிள்ளைகள் அனைத்துத் திறன்களை யும் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

l அதோடு, ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் முதலாவதாக வரவேண்டும் என்றும் அவர்களை உற்சாகப்படுத்துவாராம். தந்தை யைப் போலவே பிள்ளையும் அனைத்தும் வெற்றியில்தான் அடங்கியுள்ளது என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.

l இளமைப் பருவத்தில் இவருக்குப் பல முறை உடல்நிலை சரியில்லா மல் போவதுண்டு. 1940-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக சேர்ந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்று வந்த சமயத்தில் இவர் பொறுப்பிலிருந்த கடற்படைக் கப்பலை ஜப்பானியப் போர்க்கப்பல் தாக்கி மூழ்கடித்தது.

l காயம் பட்ட நிலையிலும் கடலில் நீந்தி தன் வீரர்களைக் காப்பாற்றினார். ஒரு வீரரைக் காப்பாற்றி சுமார் மூன்று மைல் தூரம் கடலில் இழுத்து வந்து கரை சேர்த்தார். இந்த துணிகரமான செயலுக்காக அவருக்கு ‘பர்பிள் ஹார்ட்’ என்ற வீரப் பதக்கம் வழங்கப்பட்டது. போர் முடிந்த பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

l 1947 முதல் 1953 வரை ஜனநாயகக் கட்சி சார்பாக அமெரிக்க கீழவை உறுப்பினராகவும் 1953 முதல் 1961 வரை செனட் உறுப்பினராகவும் இருந்தார். சிறிது காலம் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சிகிச்சைப் பெற்று வந்த காலத்தில் ‘Profiles in courage’ என்ற நூலை எழுதினார்.

l இந்த நூலுக்காக இவருக்கு 1957-ல் ‘புலிட்சர் பரிசு’ வழங்கப் பட்டது. 1960-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்கா வின் 35-வது அதிபராக பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது 43. இவரது பதவி ஏற்பு விழா உரை உலகப் புகழ் பெற்றது. அதில், ‘நாடு உனக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதே. நீ நாட் டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேள்’ என்று முழங்கினார்.

l அதிபரான பின் இவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கை களால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அதிக பொருளா தார வளத்தை அமெரிக்கா கண்டது. இவரது தலைமையின் கீழ், 1963-ல் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரிட்டனும் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

l இவரது ஆட்சிக் காலத்தில் கியூபா ஏவுகணை விவகாரம், பெர்லின் சுவர் பிரச்சினை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம், வியட்நாம் போர் ஆரம்பம் ஆகிய பல முக்கிய நிகழ்வுகள் உலகில் நடந்தன. அவை எழுப்பிய சவால்களை இவர் தீர்க்கமாக எதிர்கொண்டார்.

l கம்பீரமான தோற்றமும் நல்ல பேச்சாற்றலும் கொண்டவர். அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். போரை வென்றதற்காக அல்லாமல் போரைத் தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் புகழப்பட்டவர்.

l அமெரிக்காவில் இன்றும் அன்போடு நினைவுகூரப்படும் அதிபர்களுள் இவர் மிகவும் முக்கியமானவர். அமெரிக்காவில் பல முக்கிய இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1963-ல் திறந்த காரில் தன் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த சமயத்தில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இறந்தபோது இவரது வயது வெறும் 46தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x