Published : 06 Sep 2018 02:36 PM
Last Updated : 06 Sep 2018 02:36 PM

நெட்டிசன் நோட்ஸ்: "தன் பாலின உறவு சட்டவிரோதமல்ல" - பிரச்சினை சட்டம் அல்ல... சமூகம்

வயது வந்தோர் ஒரே பாலினத்தவராக இருந்தாலும், சுயவிருப்பத்துடன் பாலுறவு கொள்வதில் சட்டவிரோதமில்லை என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை இன்று (வியாழக்கிழமை)  அளித்துள்ளது.

இதுகுறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு... இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

DON ஸ்டைல் பாண்டி

‏சமத்துவம் எங்கு பிறந்தாலும் அது வரவேற்கத்தக்க நிகழ்வே..

ஜஸ்ட்ஃபார்ஜட்டி2.0

‏பிரச்சினை சட்டம் அல்ல... சமூகம்....அது மாற இன்னொரு நூறு ஆண்டுகள் பிடிக்கும்.

Ramesh

‏தன் சுய விருப்பத்தை வெளிப்படுத்த முடியாமல் இருப்பது மரணத்திற்கு சமமானது:நீதிபதி தீபக் மிஷ்ரா.

Ashwin Sai

‏இந்தியா உலக அளவில் மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கான முக்கியமான ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறது. இதன் பிறகாவது நாம் எல்லோரையும் அரவணைக்கக்கூடிய, சகிப்புத்தன்மை உடைய, சுய சிந்தனை உடைய ஒரு சமூகத்தை நோக்கி பயணிப்போமாக.

Satheesh lakshmanan

‏இனிமேல் டெல்லில வெயிலடிச்சாலும் புயலடிச்சாலும் அதுக்கு காரணம் இந்த தீர்ப்புதான்னு சொல்லுவானுங்களே ஒரு குரூப்பு.

Captain Jack sparrow

‏பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Lisa

‏மத அடிப்படைவாதிகள் கதறுவதை காணும் போது ஆகா.. என்ன சுகம்... #Section377

மணிவண்ணன்

‏ஓரிணச்சேர்க்கையாளர்களின் இத்தனை ஆண்டு கால கண்ணீர் இன்றோடு முடிந்தது ...இந்திய வரலாற்றின் மைல்கல் ...

Badhri

‏அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

நானே கடவுள்

‏கடவுள் இந்தத் தீர்ப்பை ஆதரிக்கிறான்.

வியன் பிரதீப்

‏அனைவரையும் மதிப்பதே கலாச்சாரம் அதுவே அறிவுசார் சமூகம்.

ATHISHA

‏தன்பாலின ஈர்ப்பாளர்களுடைய நீடித்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துகள் தோழர்களே

syed Subahan

‏#LGBT க்கு ஆதரவாக பேசினால் நீ GAY/LESBIAN என்று கேக்குற அளவுக்கு தான் இந்த சமுதாயம் பிற்போக்கா இருக்கு.

நமக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ தனி மனித சுகந்திரம்,விருப்பு,வெறுப்புகளில். எந்த அதிகாரமும் யாரும் செலுத்துக்கூடாது என்பது தான் அடிப்படை முற்போக்கு அதில் அரசாங்கமும் அடங்கும்

Packiarajan.. சே..

‏இரண்டாவது சிறப்பான தீர்ப்பு இன்றைய நாளில்.. இனி இந்தியாவில் தன்பாலின உறவு குற்றமல்ல. ஓரினசேர்க்கை மனநோய் அல்ல என்று ஓரினசேர்க்கைக்கு எதிரான 377 விதியை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

# அன்பு பாலினம் கடந்தது.. வாழ்த்துகள் இந்தியா.. #lovewins

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x