Published : 26 Dec 2023 06:30 PM
Last Updated : 26 Dec 2023 06:30 PM
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - பஞ்சமஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கியஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் மங்கள காரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். புதிய புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சினைகள் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு வேலை பளு ஏற்படும். அரசியல்வாதிகளின் மீது மேலிடத்தின் கவனம் விழும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - ராசியில் சுக்ரன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சமஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சினையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுபகாரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
பெண்களுக்கு எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சக தோழர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூரியன், செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சமஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், புதன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் தேவையற்ற மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து இடுதல் கூடாது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். நீண்ட காலமாக நிலவி வந்த வெறுமை நிலை மாறும்.
பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். மாணவர்களுக்கு சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவீர்கள்.
பரிகாரம்: நாகதேவதையை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT