

எளிமையான வாழ்க்கைதான் ஒருவரை வலிமையாக வாழ வைக்கும் என்ற வரிகளுக்கு ஏற்ப எப்போதும் எளிமையை விரும்பும் ரிஷப ராசிக்காரர்களே!
குரு பகவான், ஜூன் 02 முதல் உங்கள் ராசிக்கு, 3-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார். இதுவரை உங்களின் அடிமனதிலிருந்த பதற்றம், பயம், மனக் குழப்பங்கள் நீங்கி தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். வெளிவட்டா ரத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.முக்கிய வேலைகளை நீங்களே முன் னின்று முடித்தால் வெற்றி கிட்டும்.சகோதர, சகோதரிகளிடையே சின்னச் சின்ன கருத்துமோதல்கள் வரலாம். பாகப் பிரிவினையில் நடுநிலையாக செயல்படுங்கள்.
குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகப் பாருங்கள். பெரியவர்களின் ஆலோசனை களை ஏற்பது நல்லது. எந்தவொரு விஷயத்தை யும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுங்கள்.நெடுங் கால நண்பர்களாக இருந்தாலும் குடும்ப ரகசியங்களை சொல்லிக் கொண்டி ருக்காதீர்கள். அவ்வப்போது வரும் முன்கோபத்தை குறையுங்கள்.
குரு பகவான் பார்வை பலன்கள்:
குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைந் திருந்த திறமைகள் வெளிப்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சர்ச்சைகள் வந்து போனாலும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். குரு பகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். திடீர் பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். சிலர் விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்கு வார்கள்.
குரு பகவான் லாபஸ்தானமாகிய 11-ம் இடத்தைப் பார்ப்பதால், சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வற்றிய பணப்பை நிரம்பும். சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமுண்டு. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் அஷ்டம லாபாதியான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் திடீர் செலவுகள், வீண் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளை களால் மகிழ்ச்சியுண்டு. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
பாக்ய - ஜீவனாதிபதியுமான சனி பகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குருபகவான் பயணம் செய்வதால் திடீர் யோகம் உண்டாகும். குடும்பத்தில் அடுத் தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். மனக் குழப்பங்கள் விலகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது சொத்து, வாகனம் வாங்குவீர்கள்.
தன - பூர்வ புண்யாதிபதியுமான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குரு பகவான் பயணம் செய்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். கோயில் நிகழ்ச்சிகளை தலைமை தாங்கி நடத்துவீர்கள். வழக்குகள் வெற்றியடையும்.
கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குரு பகவான் செல் வதால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திட்டமிட்ட வேலையை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள்.
வியாபாரத்தில் திடீர் லாபங்களால் திக்குமுக்காடுவீர்கள். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடையை மாற்றுவீர்கள். சந்தை நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். வாடிக்கையாளர்களிடம் அன்பாக பேசுங்கள். கூட்டுப் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழிலில் பங்குதாரர்கள் முரண்பாடாக நடந்து கொள்வார்கள். உணவு, மருந்து வகைகள், எண்ணெய் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தவிடு பொடியாக்குவீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். எனினும் மேலதிகாரியுடன் அனுசரித்து போகவும். பணிச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். கணினித் துறையினருக்கு புது வாய்ப்புகள் வந்துபோகும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. கலைத் துறையினர் வீண் விமர் சனங்களைத் தவிர்க்கப் பாருங்கள். இந்த குருப் பெயர்ச்சி புத்துணர்ச்சியுடன் செயல்படும் காலமாக அமையும்.
குரு பகவான் பரிகார தலங்கள்:
சென்னை கோயம்பேடு - போரூர் செல்லும் பேருந்துகளில் பவர் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் உள்ள ராமநாதீஸ்வரர் கோயில் ஈசனை ஏதேனும் ஒரு வியாழக்கிழமையில் வணங்குங்கள். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு உணவு, உடை வாங்கிக் கொடுங்கள். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.