சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026

02.06.2026 முதல் 26.06.2027 வரை
சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
Updated on
2 min read

பயந்தவனுக்குத்தான் படை பலம் தேவை, துணிந்தவனுக்கு அல்ல என்ற வரிகளுக்கு ஏற்ப எதிலும் துணிந்து செயல்படும் சிம்ம ராசிக்காரர்களே!

குரு பகவான், ஜூன் 02 முதல் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார். இதுவரை லாபஸ்தானமாகிய 11-ம் இடத்தில் இருந்துகொண்டு, பணப் புழக்கத்தையும், மதிப்பு, மரியாதையையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது, உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் வந்து அமர்கிறார். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். எந்த ஒரு விஷ யத்தையும் தடபுடலாக முடிக்காமல் நிதானமாக செயல்படுவது நல்லது.

வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போகவும். தாய்வழி உறவினர்களி டையே விவாதங்கள் வரக் கூடும். குல தெய்வக் கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும் கூட, குடும்ப ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

குரு பகவான் பார்வை பலன்கள்:

குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்ப்பதால், தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். தாயாரின் ஆரோக்கியம் கூடும். சிலர், இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

குருபகவான் 6-ம் இடத்தைப் பார்ப்பதால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். என்றாலும் திடீர் செலவுகளும் கையை கடிக்கும். சிலருக்கு வழக்குகள் இழுபறியாகும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். குருபகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால், பணவரவு திருப்திகரமாக இருந்தாலும், சேமித்து வைக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் பூர்வ புண்ய - அஷ்டமாதிபதியுமான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் உங்களின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

சஷ்டம - சப்தமாதிபதியுமான சனி பகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குருபகவான் பயணம் செய்வதால் அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். வேலை கிடைக்கும். வங்கி கடனுதவியுடன் வீடு கட்டுவீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

தன - லாபாதிபதியுமான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குருபகவான் பயணம் செய்வதால் புதிய பதவிகள் தேடி வரும். சகோதரிக்கு திருமணம் முடியும். வேலைச்சுமை அதிகரிக்கும்.

கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குரு பகவான் செல்வதால் தடைபட்ட வேலைகள் உடனே முடியும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர தள்ளுபடி, சலுகைகளை அறிவிப்பீர்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். உணவு, மருந்து, டிராவல்ஸ், பதிப்பகம் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில், பங்குதாரர்களின் தொந்தரவு இருக்கத்தான் செய்யும். கவலை வேண்டாம்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. எனினும் தகுதிக்கேற்ற பதவியோ, சம்பள உயர்வோ இல்லையே என ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் அன்பாக நடந்து கொள்வார்கள். கணினி துறையினருக்கு எதிர்பார்த்த அயல்நாட்டில் வேலை கிடைக்கும். முதுகுத்தண்டில் வலி, பார்வைக்கோளாறு வரும். கலைத் துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவு கிட்டும். பெரிய நிறுவனத்தி லிருந்து அழைப்பு வரும். இந்த குருப்பெயர்ச்சி சோதனையை உடைத்து சாதிக்கும் காலமாக அமையும்.

குரு பகவான் பரிகார தலங்கள்:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள (மண்ணச்சநல்லூர்) உத்தமர் கோயில் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். துப்புரவு தொழிலாளர்களுக்கு ஏதேனும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். தடைகள் உடைபடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
விருச்சிகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
மகரம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in