மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026

02.06.2026 முதல் 26.06.2027 வரை
மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
Updated on
2 min read

துளைகளைக் கையாளப் பழகினால் மூங்கில் குழலாகும், துன்பங்களைக் கையாள பழகினால் வாழ்க்கை இனிமை யாகும் என்ற வரிகளைக் கேட்டு துன்பங்களைக் கடந்து வாழும் மிதுன ராசிக்காரர்களே!

குரு பகவான், ஜூன் 2 முதல் உங்கள் ராசிக்கு, 2-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார். இதுவரை ஜென்ம குருவாக இருந்துகொண்டு, பல வகையில் பிரச்சினைகளையும் மன உளைச்சலையும் கொடுத்து வந்த குரு பகவான், இப்போது 2-ம் இடத்துக்கு வருவதால், நிம்மதி பிறக்கும். உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு இனி மதிப்பு கூடும். கணவன்- மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள், இனி தடபுடலாக நடக்கும். சொந்த பந்தங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு உங்களின் வாழ்க்கை தரம் உயரும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். நின்றுபோன கட்டிட வேலைகள் இனி முழுமை அடையும்.

குரு பகவான் பார்வை பலன்கள்:

குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்ப்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கடன் பிரச்சினைகளை குறைப்பீர்கள். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வீண் பழி, வதந்திகளில் இருந்து விடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.

குரு பகவான் 8-வது வீட்டைக் பார்ப்பதால், எதிர்பார்த்தபடி பணம் வரும். முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைத்து திட்டமிட்டபடி செல்வீர்கள். குலதெய்வம் கோயிலுக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீட்டைப் பார்ப்பதால், கௌரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசு பதவியில் இருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

குரு பகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டு.

அஷ்டமாதிபதியான சனி பகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குருபகவான் பயணம் செய்வதால் வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உங்கள் ராசிநாதனும், சுகாதிபதியுமான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குரு பகவான் பயணம் செய்வதால் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.

கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குருபகவான் செல்வ தால் எதிரிகள் அடங்குவார்கள். சொந்த ஊரில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். கொடுக்கல் வாங்கலில் நிம்மதியுண்டு. ஹோட்டல், ரியல் எஸ்டேட், வாகன உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக் வகைகளால் லாபமடை வீர்கள். ரசனைக்கு ஏற்ப கடையை மாற்றி அமைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவு கொடுப்பார்கள். தொல்லை தந்த பணியாட்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் நீண்ட நாளாக காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி உங்கள் இருக்கைத் தேடி வரும். மேலதிகாரி உங்களை புரிந்து முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவர். கணினி துறையினருக்கு வெளிநாட்டு கம்பெனியிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். இந்த குருப் பெயர்ச்சி நினைத்ததை முடிக்கும் காலமாக அமையும்.

குரு பகவான் பரிகார தலங்கள்:

மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் 0.5 கி.மீ தொலைவில் உள்ள வதாரண்யேஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் குரு வடிவ தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். எல்லா வகையிலும் முன்னேற்றமுண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
கடகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in