Published : 17 Dec 2020 12:17 pm

Updated : 17 Dec 2020 12:17 pm

 

Published : 17 Dec 2020 12:17 PM
Last Updated : 17 Dec 2020 12:17 PM

மகரம், கும்பம், மீனம் : வார ராசிபலன்கள்; 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை

vaara-rasipalangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்


உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்

இந்த வாரம் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

உற்றார் உறவினர்கள் உங்கள் உயர்வைக்கண்டு ஆச்சரியப்படுவார்கள். வருமானம் சீராக வந்து கொண்டிருந்தாலும் சில விரயங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
பிள்ளைகளின் நலனுக்காகவும் சிறிது செலவு செய்ய நேரிடும். சமூகத்தில் உங்கள் பெயர் கௌரவம் கூடும். இழப்புகளை ஈடு செய்யும் அளவுக்கு புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வந்து கொண்டிருக்கும்.

கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் நீண்டகால விருப்பங்களெல்லாம் எளிதாகக் கிடைக்கப் பெற்று உடலும் உள்ளமும் உற்சாகமடைவீர்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கும், திருப்திகரமான லாபமும் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள் பெருமளவில் தேடி வரும்.

மாணவர்களுக்கு கல்வித்துறையில் சாதனை படைத்தவர்களாகச் சிறப்பிடம் பெற்று விளங்குவீர்கள். அரசியல்துறையினருக்கு சிறப்பான பதவிகளை அளிக்கத் தலைமை முன்வரக்கூடும்.

பெண்களுக்கு குடும்பத்தில் அமைதி ஏற்படும். உங்கள் செல்வன்மை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, நீலம்

எண்கள்: 1, 3, 6, 9

பரிகாரம்: ஸ்ரீமஹாகணபதியை பிரார்த்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கும்பம்:

இந்த வாரம் உங்கள் காரியங்களில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள்.

சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை செயல்படுத்துவீர்கள். மற்றவர்கள் உங்கள் பேச்சைத் திரித்து புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதால், வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும்.

நெடுநாளாக விற்பனை ஆகாமல் இருந்த சொத்துகள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். சில நேரங்களில் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்பு இருப்பதால் அவசியமற்ற பொருட்களை வாங்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் உங்கள் முயற்சிகளில் தடங்கல், தாமதங்களைத் தவிர்க்க முடியாது.

வியாபாரிகளுக்கு சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
மாணவர்களுக்கு ஒருமுறைக்குப் பலமுறை பாடங்களைப் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அரசியல்வாதிகளுக்கு உங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். பெண்களுக்கு குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை தானகவே நிவர்த்தியாகிவிடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி

திசைகள்: கிழக்கு, மேற்கு

நிறங்கள்: பச்சை, நீலம்

எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: ஸ்ரீபைரவருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.
**************

மீனம்:

இந்த வாரம் நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள்.

செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்துவிட்டு நம்பிக்கை சின்னமாகக் காட்சியளிப்பீர்கள். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள்.

ஆலய திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழடைவீர்கள். மனதிலும் வைராக்கியம் கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

மாணவர்களுக்கு படிப்பில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். அதன் மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் குதூகலம் நிரம்பி வழியும். குடும்பத்தினரின் அன்பையும், நன்மதிப்பையும் குறைவில்லாமல் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6, 9

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வச் சேர்க்கை உண்டாகும்.
~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!மகரம்கும்பம்மீனம் : வார ராசிபலன்கள்; 17ம் தேதி முதல் 23ம் தேதி வரைமீனம்வார ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்Vaara rasipalangalMagaramKumbumMeenam

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x