Published : 15 Dec 2020 01:58 PM
Last Updated : 15 Dec 2020 01:58 PM

சனிப்பெயர்ச்சி பலன்கள் ; ஆயில்யம் நட்சத்திர அன்பர்களே! வீண் வாக்குவாதம் வேண்டாம்; காரியத்தில் தாமதம்; லாபம் அதிகரிக்கும்; பணிகளில் வெற்றி!

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ஆயில்யம் :

சனி பகவான் உங்களின் பதிமூன்றாவது நட்சத்திரத்திலும் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சந்திரன் - புதன் அம்சத்தில் பிறந்த நீங்கள் எடுத்த முடிவில் மாறாத கொள்கை கொண்டவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் காரியங்களில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை ஏற்படலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். நட்சத்திராதிபதி புதன் சஞ்சாரம் வாகன யோகத்தைத் தரும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள், கூடுதல் பொறுப்பு முதலானவை கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கிøடையே இருந்த கருத்துவேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காகப் பாடுபட வேண்டி இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

கலைத்துறையினருக்கு பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

அரசியலில் உள்ளவர்கள் பணவரவு காண்பார்கள். ஆனால் பதவி கிடைப்பதில் தாமதம் ஆகும். சுயநலம் விடுத்து பொதுநலம் கருதி பாடுபடவும்.
பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். நாக வழிபாடுகள், நாக கன்னி வழிபாடுகள், புற்று வழிபாடுகள் முதலானவற்றால் காரியத் தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்குக் கிடைக்கும்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x