Published : 16 Sep 2023 05:34 AM
Last Updated : 16 Sep 2023 05:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மகன், மகளின் திருமணம் கூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்: அடிப்படை வசதிகள் பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்: பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.

கடகம்: தொட்டது துலங்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகைகைக்கு வரும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.

கன்னி: நெருங்கியவர்கள் சிலரால் ஏற்படும் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. பழைய வாகனம் செலவு வைக்கும். கலை பொருட்கள் சேரும்.

துலாம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டுக் கொண்டாலும், நீங்களே முடிவு செய்யவும். பணவரவு உண்டு.

விருச்சிகம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வழக்குகள் சாதகமாகும்.

தனுசு: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.

மகரம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து இனி வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சொந்த ஊரில் எதிர்ப்புகள் வரும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரில் சென்று முடியுங்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். புதிய பொறுப்பு தேடி வரும்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். பழைய வாகனம் செலவுவைக்கும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x