Published : 05 Sep 2023 05:32 AM
Last Updated : 05 Sep 2023 05:32 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். பிற்பகல் முதல் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். பூர்வீக நிலம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு.

மிதுனம்: தம்பதிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். மகன், மகளின் கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கில் கவனம் இருக்கட்டும். பணவரவு உண்டு.

கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனது காயப்படும்படி நடந்து கொள்ள வேண்டாம். பிற்பகல் முதல் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.

துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர், வேற்று மொழி பேசுபவர்கள் அறிமுகமாவர். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்ப்பது நல்லது.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களது பெருமை பேசப்படும். பொது காரியங்களில் ஈடுபடுவீர். பணவரவு திருப்தி தரும்.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்.குடும்பத்துடன் சென்று நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசவும்.

மகரம்: அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பிறரை எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x