Published : 26 Aug 2023 05:30 AM
Last Updated : 26 Aug 2023 05:30 AM
மேஷம்: தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இன்று சுமுகமாக முடியும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பூர்வீக வீட்டை விற்பனை செய்ய முயற்சிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசிய மாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண் டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர் கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனத் துடன், நல்ல முடிவு எடுக்கவும். பணவரவு உண்டு.
கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியான வழக்கில் வெற்றி கிட்டும்.
சிம்மம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியான வழக்கில் வெற்றி கிட்டும்.
கன்னி: மனச் சோர்வு நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வாகனம் வாங்குவீர்கள்.
துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத் தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். கலை பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்கு பிடித்தவர்கள், பிடிக்காத வர்கள் என்று யாரையும் பிரித்துப் பார்க்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் நிலை சீராக அமையும். நண்பர்கள், உறவினர்களின் வருகை யுண்டு. கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும். திட்டமிட்டபடி அயல்நாட்டு பயணம் நிறைவேறும்.
கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண் டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.
மீனம்: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம் பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசிப்பீர்கள். யாரிடமும் பகைமை பாராட்ட வேண்டாம். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT